வால்பாறையில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள்... பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு..!

கோவை: வால்பாறையில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.


கோவை: வால்பாறையில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்படி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.



தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தால் 116 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள வசதிகள் எவ்வளவு காலத்தில் கட்டி முடிக்கப்படும் போன்ற விவரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார்.

அத்துடன், எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பணிகள் தடங்கலின்றி நடைபெற தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நகரச் செயலாளர் பால்பாண்டி, கோழிக்கடை கணேசன், JBR பாஸ்கர், மகுடீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...