கோவை மாநகராட்சி சார்பில்‌ வாகனங்களில் காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை விற்பனை..!

கோவை: தமிழ்நாடு அரசின் முழு ஊரடங்கில்‌ பொது மக்களின்‌ அன்றாடத் தேவைகளான காய்கறிகள்‌, பழங்கள்‌ போன்ற அத்தியாவசியப் பொருட்கள்‌ எந்தவிதமான தங்குதடையின்றி உடனடியாக அவர்கள்‌ இருப்பிடத்திற்கே சென்று சேரும்படி கோவை மாநகராட்சி சார்பில்‌ ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்‌ தொடங்கி வைக்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு அரசின் முழு ஊரடங்கில்‌ பொது மக்களின்‌ அன்றாடத் தேவைகளான காய்கறிகள்‌, பழங்கள்‌ போன்ற அத்தியாவசியப் பொருட்கள்‌ எந்தவிதமான தங்குதடையின்றி உடனடியாக அவர்கள்‌ இருப்பிடத்திற்கே சென்று சேரும்படி கோவை மாநகராட்சி சார்பில்‌ ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்‌ தொடங்கி வைக்கப்பட்டன.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ அமைந்துள்ள மொத்த காய்கறி கொள்முதல்‌ மார்க்கெட்டில்‌ இன்று 25.05.2021 நடைபெற்ற செய்தியாளா்கள்‌ சந்திப்பில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., ‘‘தமிழ்நாடு அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில்‌ பொது மக்களின்‌ அன்றாடத் தேவைகளான காய்கறிகள்‌, பழங்கள்‌ போன்ற அத்தியாவசியப் பொருட்கள்‌ எந்தவிதமான தங்குதடையின்றி உடனடியாக அவர்கள்‌ இருப்பிடத்திற்கே சென்று சேரவேண்டும்‌ என்ற அறிவுரைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று காலை மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர் அவர்களாலும்‌, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவா்களாலும்‌ மாநகராட்சி சார்பில்‌ ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்‌ தொடங்கி வைக்கப்பட்டன.

அதன்‌ தொடர்ச்சியாக, நேற்று காலை 9.00 மணியிலிருந்து தனியார்‌ விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள்‌ வியாபாரம்‌ செய்யும்‌ இடங்களுக்கு வீடு வீடாகச்‌ சென்று காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டது. பின்னர்‌ நேற்று மாலை முதல்‌ வெளியூர்களில்‌ இருந்து காய்கறிகள்‌, பழங்கள்‌ வரவேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ அனைத்து வியாபார பெருமக்களையும்‌ தொடா்பு கொண்டு அனைத்து காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை வர வையுங்கள்‌ என்று கூறி நேற்று இரவு முதல்‌ பல்‌வேறு கட்ட நடவடிக்கைகள்‌ எடுத்து, தற்போது மாநகருக்குத்‌ தேவையான அனைத்து காய்கறிகள்‌, பழங்கள்‌ இங்கே வந்து சோந்துள்ளன. அவை இன்று காலை அனைத்து இடங்களுக்கும்‌ 165 தனியார்‌ வாகனங்களில்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும்‌, இது இல்லாமல்‌ உழவர்‌ சந்தைகளில்‌ இருந்து மாநகராட்சிக்குச்‌ சொந்தமான 70 வாகனங்களில்‌ காய்கறிகள்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனுடைய நோக்கம்‌ விலையை எந்த ஒரு சூழ்நிலையிலும்‌ ஏற்றம்‌ செய்துவிடக்‌ கூடாது என்பதற்காக இப்பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்‌.

மேலும்‌, வெளியூர்களில்‌ இருந்து வேளாண்‌ பெருமக்கள்‌ அவர்களுடைய உற்பத்திப் பொருட்களை மாநகருக்குள்‌ கொண்டு வந்து ஆங்காங்கே விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்‌. அதிலும்‌ எந்த விதத்திலும்‌ விலை ஏற்றமாகிவிடக்‌கூடாது என்ற நோக்கத்தில்‌ அலுவலர்களை அறிவுறுத்தி தகுந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்‌'' என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...