கோவை: வால்பாறை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வியாபாரிகள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.

வால்பாறை பகுதியில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பு அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் வால்பாறை அரசு மருத்துவமனையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனிடையே, ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம் அமைக்க சுமார் 30 லட்சம் மதிப்பில் செலவாகும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் தன்னார்வலர்களிடம் பணம் பெற்று வால்பாறையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களிடம் வால்பாறை அனைத்து வட்ட வியாபாரிகள் இணைந்து சவுந்தர்பாண்டி, சுரேஷ், ஷாஜூ, பிரதீப், தியாகு, ஆகியோர்கள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களிடம் 50000 ஆயிரம் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், நகரக் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.