கோவை: கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு நாட்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மூலம் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, கடந்த 22-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் இருந்து திண்டுக்கல், தேனி, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் பயணித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து கோவை போக்குவரத்து கழக உதவி பொதுமேலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2 நாட்களில் வெளியூர்களுக்கு 410 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுதவிர டவுன் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த 2 நாட்களில் மொத்தம் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 15 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு தனியார் பணியாளர்களுக்கு தனித்தனியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி 14 பேருந்துகள் (நேற்று) இயக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.