கோவை: வால்பாறையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகள், பால் மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி பொதுமக்கள் ஏராளமானோர் வால்பாறை நகரில் சுற்றிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையில் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்து, அத்தியாவசிய தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், சாலைகளில் அனாவசியமாக நடப்பவர்களை கண்டித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதன் காரணமாக வால்பாறையில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.