கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம்..!

கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடமாடும் காய்கறி அங்காடியை குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடமாடும் காய்கறி அங்காடியை குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில் ஐந்து வாகனங்களில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் காய்கறி அங்காடியை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.



இந்த நடமாடும் காய்கறி அங்காடியில் குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்கி பயன் பெறலாம் என்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், தமிழ்பித்தன், கணேஷ் குமார்,மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...