கோவை: வால்பாறையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிஎஸ்ஐ ஆலயம் மூலம் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், முழு ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை வால்பாறையில் உள்ள சிஎஸ்ஐ ஆலய நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

இன்று மதியம் சிஎஸ்ஐ ஆலயத்தின் முன்புறம் உணவு வழங்கும் திட்டத்தினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
அவருடன் மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, சிஎஸ்ஐ திருச்சபையினர், முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜே.பி.ஆர்.பாஸ்கர், மகுடீஸ்வரன் முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த உணவு வழங்கும் திட்டம் ஊரடங்கு காலம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று திருச்சபையினர் தெரிவித்தனர்.