தமிழகத்திலேயே மிகவும் குறைவான விலையில் கோவை மக்களுக்கு காய்கறிகள் விற்பனை - குமரன் மார்கெட் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

கோவை: தமிழகத்திலேயே மிகவும் குறைவான விலையில் கோவை மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என டி.கே. மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.



கோவை: தமிழகத்திலேயே மிகவும் குறைவான விலையில் கோவை மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என டி.கே. மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

கோவை பெரியகடை வீதி பகுதியில் டி.கே. மார்க்கெட் என சொல்லக்கூடிய தியாகி குமரன் மார்க்கெட் கடந்த 1930ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 450 கடைகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த மார்க்கெட்டிற்கு பெரிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பல வகையான காய்கறிகள் வருகின்றன.

இந்தநிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோவை மாநகர மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தியாகி குமரன் மார்க்கெட்டில் இருந்து மாநகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் மேல் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டி.கே. மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தமிழக மக்களின் நலன் கருதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம். கோவை மாநகர மக்களுக்கு காய்கறிகள் அவரவர் வீடுகளுக்கே நடமாடும் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிறப்பாக செயல்பட்டு அதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளார்.

தியாகி குமரன் மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்கிறோம். சேவை மனப்பான்மை கொண்டு இதை செய்கிறோம். தமிழகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட குறைவான விலையில் காய்கறிகளை வழங்குவோம். தினமும் நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால் தங்குதடையின்றி காய்கறிகள் கிடைக்கும்'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...