கோவை: மூன்று மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து குறுந்தொழில் முனைவோருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, டேக்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்(TACT) தலைவர் ஜேம்ஸ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்ற குறு சிறு தொழில் முனைவோர்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதை தங்கள் நிச்சயம் அறிவீர்கள். கொரோனா முதல் அலை தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த தொழில் முனைவோர்களை இரண்டாம் அலை கொரோனா தொற்று கடுமையான நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. குறுந்தொழில்களை பாதுகாக்க 1.4.2021 முதல் 31.7.2021 வரை மூன்று மாதத்துக்கு தொழில் முனைவோர்களுக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மூன்று மாதத்துக்கு 50 சதவீதம் மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும்.
குறுந்தொழில்களைப் பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவித்து குறுந்தொழில்களின் ஆண்டு வருமானம் கணக்கு எடுத்து அதில் 25 சதவீதம், மிகக்குறைந்த வட்டி 5 சதவீதத்தில் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி அனைத்து விதமான கடன்களை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாதம் கால அவகாசம் பெற்று தருவதுடன் அதற்கான வட்டி தள்ளுபடி செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.