கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த வக்கீல்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால், கடந்த 18 முதல் நீதிமன்ற பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜாமின் மனுக்கள் மீது மட்டும் வாரத்தில் ஒரு நாள், ஆன்லைன் வாயிலாக விசாரணை நடக்கிறது.
நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள், நீதிமன்றத்திற்கு வராமல் இருந்த போதிலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இதுவரை 80க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 50க்கும் மேற்பட்ட வக்கீல்களும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 20ம் தேதி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சீனியர் வக்கீல் பழனிச்சாமி,79, உயிரிழந்தார். கடந்த 3 நாட்களில் மட்டும் நான்கு வக்கீல்கள் உயிரிழந்துள்ளனர். மேட்டுப்பாளையம் கிறிஸ்டோபர் (65), சுலோச்சனா (78), தாராபுரம் அய்யாசாமி (64), ஆர்.எஸ்.புரம் ராஜேந்திரன் (56), ஆகியோர் உயிரிழந்தனர்.