கோவை: கோவை மாவட்டத்தின் நகரப்பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் சுய ஊரடங்கு நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் அளித்த கோரிக்கையில், ‘‘கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கோவை மாவட்டத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ளது, இருப்பினும் இச்சூழலை எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. கிராம பகுதிகளிலும், கோவை மாநகர உட்பகுதிகளிலும் மற்றும் புறநகர பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் என்பது இருந்து வருகிறது. அதேநேரத்தில், நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய கடமையாகும்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி வார்டுகளில் சுய ஊரடங்கை அமலாக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் வருவாய்த் துறை- காவல் துறை ஆகியோரைக் கொண்ட விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தலாம். வீடுகளுக்குள் சுயமாக முடங்குவதுதான் கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறோம். அதற்கென நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அதில் வலியுறுத்தியுள்ளார்.