தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிக்காக வால்பாறை திமுக நிர்வாகிகள் நிதி வழங்கினர்..!

வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் திமுக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிதி அளித்தனர்.


வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் திமுக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிதி அளித்தனர்.

தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தநிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் கொரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலையில் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன் ரூபாய் 51000/-மும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் JBR, ரூபாய் 50000/-மும் நிதி அளித்துள்ளனர்.



இந்நிகழ்வின்போது உடன் வட்டாட்சியர் ராஜா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, நகரக் கழகப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், தொழிற் சங்க துணைத்தலைவர் ஈகா. பொன்னுச்சாமி, நகர மாணவரணி அமைப்பாளர் மணிகண்ட பிரபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் செல்வம், சுதாகர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், மணிகண்டன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ், மற்றும் அம்பிகை சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...