கோவை: தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம்(OSMA) சார்பில் இன்று ஒரே நாளில் 1,160 ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை: தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம்(OSMA) சார்பில் இன்று ஒரே நாளில் 1,160 ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம்(OSMA) சார்பில், இன்று கோவையில் இருவேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
காளப்பட்டி, சுப்ரீம் மில்ஸ் வளாகத்தில் நடந்த முகாமில் 515 பேருக்கும், கண்ணபிரான் மில்ஸ் வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமில், 645 பேர் என மொத்தம் ஒரே நாளில் 1,160 ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனை யுடன் இணைந்து இந்த சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகிகள் அருள்மொழி, ஜெயபால் மற்றும் ராம்பிரசாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.