கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாக்கெட்டுகள் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்..!

நீலகிரி: கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 165 மது பாக்கெட்டுகள், 206 மது பாட்டில்கள் மற்றும் 3 ஆயிரம் ஹான்ஸ் பாக்கெட்களைக் கடத்தி வந்த இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், வாகனமும் பறிமுதல் செய்தனர்.


நீலகிரி: கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 165 மது பாக்கெட்டுகள், 206 மது பாட்டில்கள் மற்றும் 3 ஆயிரம் ஹான்ஸ் பாக்கெட்களைக் கடத்தி வந்த இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், வாகனமும் பறிமுதல் செய்தனர்.



கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனைச் சாவடி வழியாக ஊட்டி மற்றும் கூடலூருக்கு காய்கறி ஏற்றி வந்த வாகனங்களில் கடத்திவரப்பட்ட 165 மது பாக்கெட்டுகள் மற்றும் 206 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஊட்டியைச் சேர்ந்த நாராயணன் மற்றும் கூடலூர் சேர்ந்த சஜின்தேவ் ஆகிய இருவரை கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



மேலும், நீலகிரி மாவட்டம் தேவாலா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குண்டல்பெட்டில் இருந்து பந்தலூருக்கு காய்கறி ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்யும் பொழுது அதில் 3 ஆயிரம் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்கள் சிக்கியன.

இந்த மது மற்றும் புகையிலை பறிமுதல் தொடர்பாக, பந்தலூர் கூவமூலா பகுதியைச் சேர்ந்த முகம்மது(32) மற்றும் பந்தலூர் அட்டி பகுதியைச் சேர்ந்த சலீம்(32) என்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...