வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றைக் குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!

வால்பாறை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றைக் குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் எஸ்டேட்கள், மருத்துவர்கள் எஸ்டேட் நிர்வாகத்தினர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


வால்பாறை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றைக் குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் எஸ்டேட்கள், மருத்துவர்கள் எஸ்டேட் நிர்வாகத்தினர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

‘‘கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வால்பாறையில் இன்றுமுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், வால்பாறை பகுதியில் 56 எஸ்டேட் பகுதிகள் உள்ளன.



இவற்றில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதைத் தடுக்க வால்பாறையில் உள்ள எஸ்டேட், டாடா காபி, பி.கே. டீ, வாடர்பால்ஸ், வூட்பேரியார், ஜெயஸ்ரீ, பிபிடிசி, பாரியக்கரா போன்ற நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதில் வட்டாட்சியர் ராஜன், சுகாதாரத் துறை மருத்துவர் பாபு லட்சுமணன், அரசு மருத்துவர் மகேஷ் அனந்தி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் தடுப்பு ஊசி அனைத்து மக்களுக்கும் போட வேண்டும், எஸ்டேட் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து தொழிலாளர்களைக் பாதுகாக்க வேண்டும், வெளியூர்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும்'' என்றும் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.



வால்பாறை கொரோனோ சென்டர் மையத்திற்கு தேவையான ஆக்சிஜன் அமைக்க அரசு மருத்துவமனையில் இடம் தேர்வு செய்து நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் தன்னார்வலர்கள் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க இடம் தெரிவு செய்யப்பட்டது. மேலும், சில தினங்களாக வால்பாறை பகுதிக்கு கொரோனா தடுப்பூசி இல்லாமல் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் 5000 ஆயிரம் தடுப்பு ஊசிகள் வழங்கி நாளை முதல் அனைத்து 18 முதல் 44 வயது வரையும் உள்ளவர்களுக்கு தடுப்பு ஊசி வழங்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...