'என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்...'- கமல்ஹாசன் உருக்கமான பேச்சு..!

கோவை: ‘‘என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்... அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மையம் இருக்கும்..!'' என்று வீடியோ மூலம் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் உருக்கமான பேச்சு வெளியாகி உள்ளது.


கோவை: ‘‘என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்... அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மையம் இருக்கும்..!'' என்று வீடியோ மூலம் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் உருக்கமான பேச்சு வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். அதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் துணைத் தலைவர் உட்பட பலர் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினர்.

இந்த நிலையில், இன்று கமல்ஹாசன் வீடியோ மூலமாக மக்களுக்கு உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் பேசியுள்ள வீடியோ தகவல் வருமாறு... ‘‘உயிரே... உறவே... தமிழே. ‘ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது' என்பார்கள் அதற்கு நாம் ஆளாகி விடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் நாம் வெற்றிப் பாடம் கற்க வேண்டும். நாம் அறிந்த சரித்திரம் மக்களிடமும் அறிமுகம் இல்லாதவர்களிடமும் சற்று தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்ன வைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாகத் தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களுக்குள்ளேயே தந்து வளர வழி செய்தது ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கும்.

பிறகு காலச் சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியால் தெரியாமல் போய்விட்டது. கூட்டணி அமைப்பதில் நாம் காட்டிய வெளிப்படை தன்மையும் அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகத் தன்மையும் அனைவரும் அறிந்தது. தோல்விக்குப் பின் அவரவர் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகம் ஆகும். நல்ல ஜனநாயகத்திற்கு செய்யும் செயல் கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப்படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மையக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய் விடாது, என்பது தற்கால தாகத்திற்கு குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. 40 ஆண்டுகாலம் நிறைத்து நீர் வார்த்து அதில் உடல் சற்றே சோர்ந்து இருந்தாலும் உற்சாக ஊற்று ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. என்றும் நம் அனுபவம் சொல்லும் பாடம் இதுதான்.

நம் நிலம் இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் இதுதான். இதைவிட்டு, நமக்கு இந்த நிலத்தைப் பற்றித் தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள், அப்படியல்ல ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள். பிறகு திரும்பவும் சென்றவர்கள் வெளியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், மீண்டும் நீர்நிலை ஊரணியை, பாழ்பபடுத்த விடமாட்டோம் என உறுதியுடன் நம் பணியை நேர்மையாகத் தொடர வேண்டும். அதுவே, நாம் தரும் செய்தியாக உலகறியும், மற்ற சிலர் தன் தவறுகளை மறைத்து வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. காலம் பதில் சொல்லும்.

உண்மை எல்லாம் தெரிந்து ஊமையாக இருக்கச் சொல்கிறீர்களா? என்று வெகுண்டு குரலெழுப்பும் தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் உயிரே... உண்மை பேசு, உறவே வாதாடு, அதற்கு நம் தாய் தமிழ் ஒன்றே போதும். மறந்தும் நம் மொழி மாசு படாமல் இருக்கும் தரம் குறையாமல் இருக்கும் கட்சியின் உயர் கட்டமைப்பை தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல்வீரர்கள் அவருடைய கரங்கள் வலுப்படுத்தப்படும் இனி உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை மக்கள் காண்பார்கள். கொள்கைத் தெளிவும் பாதையில் நேர்மையும் நம் பயணத்தை தடுக்காது. உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். இப்படிக்கு உங்களில் நான்'' என்று கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...