நகராட்சி சார்பில் பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம்..!

பொள்ளாச்சி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகராட்சி சார்பில் பொள்ளாச்சியில் 36 வார்டுகளிலும் 15 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்யப்பட்டது.


பொள்ளாச்சி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகராட்சி சார்பில் பொள்ளாச்சியில் 36 வார்டுகளிலும் 15 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தநிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, பழங்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு தேடி காய்கறிகள் விநியோகம் செய்யும் பணிகள் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளுக்கும் காய்கறி விநியோகம் செய்யும் வகையில் வேளாண் துறை மற்றும் உழவர் சந்தை மூலமாக காய்கறிகள் கொள்முதல் செய்து 15 வாகனங்கள் மூலம் வார்டு வாரியாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று காய்கறி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



அனைத்து காய்கறிகளும் மலிவு விலையில் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறிகளை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...