கோவை: கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைக்கு முக்கியத் தேவையாக உள்ளது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள். இதனைக் கருத்தில் கொண்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் ரூபாய் 30 லட்சம் செலவில் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கவிருப்பதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
அப்போது, தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தியிடம் அங்குள்ள வசதிகள், தேவைகள் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து வால்பாறை மருத்துவமனையை சுற்றிப் பார்வையிட்டார். தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைக்கு முக்கியத் தேவையாக உள்ளது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகும்.
இதனைக் கருத்தில் கொண்டு வால்பாறை அரசு மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் விரைவில் வால்பாறை அரசு மருத்துவமனையில் ரூபாய் 30 லட்சம் செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் இந்த ஆய்வின் போது மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் பால்பாண்டி, முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், மகுடீஸ்வரன், சத்தியமூர்த்தி, கவுன்சிலர் செல்வம் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.