வால்பாறையில் கொரோனா பரிசோதனை மையம்..! நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்!

கோவை: வால்பாறையில் கொரோனா பரிசோதனை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா பரிசோதனை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது.



இந்நிலையில், வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் இன்று கொரோனா சிகிக்சை மையத்தை ஆய்வு செய்து, படுக்கை வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்து இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்.

இதனிடையே, வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது 170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பொள்ளாச்சி, கோவை போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதேபோல, வால்பாறை பகுதியில் சுமார் 15 பேர் கொரோனாவால் இறந்து விட்டனர்.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு ஆங்காங்கே பகுதிகளில் கொரோணா சிகிச்சை மையம் அமைக்க அறிவுறுத்தல் செய்தனர்.

இதனிடையே, வால்பாறை பகுதியில் கல்லூரி வளாகத்தில் இந்த கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறையில் உள்ள கொரோனா நோயாளிகள் வால்பாறை பகுதியிலே சிகிச்சைக்கு வருவார்கள். மேலும், நோய் தொற்றை குறைக்கவும் முடியும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், வட்டாட்சியர் ராஜன், டாக்டர் பாபு லட்சுமணன், டாக்டர் மகேஷ், அனந்தி, திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை பொறுப்பாளர் பால் பாண்டி, முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கட்டை கணேசன், வடை கடை குட்டி மாகுடிஸ்வரன், ஜெயராம் மணிகண்டன், வெங்கடேஷ் சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...