கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 160 பேருந்துகள் இயக்கம்..!

கோவை: கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு 160 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.


கோவை: கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு 160 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, கோவையில் நேற்று முன்தினம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று கோவையில் இருந்து திண்டுக்கல், மதுரை, கரூர், நாமக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவை உக்கடத்தில் இருந்து பழனி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு 90 பேருந்துகளும், சேலம், ஈரோடு, உடுமலை, கோவை-மேட்டுப்பாளையம், கோவை-பொள்ளாச்சி இடையே 70 என 160 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...