தமிழகம் முழுவதும் 'வாட்டர் புரூப்', 'ஆன்டி-வைரல்' மெத்தைகள் மற்றும் கட்டில்கள் தயாரித்து வழங்கி வரும் கோவை சாஸ்தா டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்!

கோவை: 'கொரோனா' நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் செயல்பட்டு வரும் சாஸ்தா டெக்னிகல் டெக்ஸ்டைல் நிறுவனம் தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு தேவையான வாட்டர் புரூப்,' 'ஆன்டி-வைரல்' மெத்தைகள் மற்றும் கட்டில்கள் தயாரித்து, லாப நோக்கின்றி வழங்கி வருகிறது.


கோவை: 'கொரோனா' நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் செயல்பட்டு வரும் சாஸ்தா டெக்னிகல் டெக்ஸ்டைல் நிறுவனம் தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு தேவையான வாட்டர் புரூப்,' 'ஆன்டி-வைரல்' மெத்தைகள் மற்றும் கட்டில்கள் தயாரித்து, லாப நோக்கின்றி வழங்கி வருகிறது.

இது குறித்து கோவை, 'சாஸ்தா டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்', நிர்வாக இயக்குனர், சாஸ்தா எம் ராஜா கூறியதாவது,



கோவையில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனத்தில் PPE உடைகள் மற்றும் மாஸ்க் தயாரிக்க பயன்படுத்தப்படும் பேப்ரிக், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர் உள்ளிட்ட டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ் பிரிவின்கீழ் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்துவருகிறோம்.

நோய் தொற்று பரவல் முதல் அலையின் போது PPE உடைகள் மற்றும் மாஸ்க் தயாரிக்க பயன்படுத்தப்படும் பேப்ரிக்ஸ் முதலில் வழங்கிய இரண்டு நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் ஒன்றாகும். தற்பொழுது நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முகாம்களில் பயன்படுத்தப்படும் மெத்தைகள் மற்றும் கட்டில்கள் ஸ்பான்சர்கள் மூலம் அரசுக்கு வழங்கப்படுகின்றன.



எங்கள் நிறுவனம் சார்பில் லாப நோக்கம் இல்லாமல் குறைந்த விலைக்கே அத்தகைய ஸ்பான்சர்களுக்கு மெத்தைகள் மற்றும் கட்டில்களை வழங்கி வருகிறோம். கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மெத்தைகள் மற்றும் கட்டில்களை வழங்கி உள்ளோம். இந்த மெத்தைகள் அனைத்தும் 'வாட்டர் புரூப்,' 'ஆன்டி-வைரல்' மெத்தைகள் ஆகும். எந்த வைரசும் உள்ளே செல்லாது.

சில நேரங்களில் நோயாளியின் இயற்கை உபாதை நீர் மெத்தையில் பட்டாலும் அவை மெத்தையின் மேற்புறத்தில் மட்டுமே நிற்கும். துணியை கொண்டு அவற்றை துடைத்தால் மட்டும் போதுமானது. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இதுவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணா நகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெருந்துறை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.



மேலும், கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் ஸ்பான்சர்கள் மூலம் வழங்கப்பட்ட மெத்தைகள் மற்றும் கட்டில்கள் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் தேவைக்கேற்ப மேலும் பல பொருட்களை உற்பத்தி செய்து தர தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...