கோவை மாநகராட்சியில் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்க்க டோக்கன் வழங்க திட்டம்!

கோவை: கோவை மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை தடுக்க டோக்கன் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை தடுக்க டோக்கன் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது.

தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களில் காலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் மூலமாகவும் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டது. எனவே, திரும்பிச் செல்லுங்கள் என்று சுகாதார துறை ஊழியர்கள் கூறி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாநகராட்சியில் அரசு கலைக்கல்லூரி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி பள்ளி, மணியக்காரம்பாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளி ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பொதுமக்கள் காலை நேரத்தில் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தடுப்பூசி போட வருபவருக்கு தடுப்பூசி போடப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் தடுப்பூசி போட அவர் வந்தால் போதும். இதன்மூலம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...