கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்கள் தொடக்கம்!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்களை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்களை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சமயத்தில் அனைத்து வகையான கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பால், குடிநீர் விநியோகம், நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



அதனடிப்படையில், கோவையில் வீடு தேடி வந்து காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்கு ஒரு வார்டுக்கு 2 வாகனங்களை இயக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு மண்டலத்துக்கு 10 வாகனங்கள் என்ற அடிப்படையில் 50 நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்களை கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து உள்ளனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விருப்பமுள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலகங்களில் அனுமதி பெற்று ஒதுக்கப்படும் வார்டுக்கு சென்று விற்பனை செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



அனைத்து வாகனங்களிலும் காய்கறி விலை ஒரே மாதிரியாக விற்கப்பட வேண்டும் எனவும் எந்த விதத்திலும் வித்தியாசம் வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் விற்பனையை கண்காணிக்கவும் கூடுதல் வாகனங்கள் தேவைப்பட்டால் இயக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் குழு நியமித்துள்ளது.

மேலும், ஒவ்வொருவருக்கும் காய்கறி வாகனங்கள் செல்வதையும், தனிநபர் இடைவெளியுடன் விற்பனை நடைபெறுவதையும் மாநகராட்சி வருவாய் பிரிவினர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், வார்டு வாரியாக சென்று காய்கறி விற்க விரும்பும் வியாபாரிகள் அந்தந்த மண்டல உதவி ஆணையரிடம் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...