பொள்ளாச்சி அருகே மயில்கள் மர்ம மரணம்... வனத்துறை விசாரணை..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆறு மயில்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது. விஷம் வைத்து கொள்ளப்பட்டனவா என்று வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆறு மயில்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது. விஷம் வைத்து கொள்ளப்பட்டனவா என்று வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த செஞ்சேரிமலை, நகரகளந்தை என்ற கிராமத்தில் உள்ள சிவக்குமார் என்பவரது தோட்டத்தில், 1 ஆண் மயிலும், 4 பெண் மயில்களும், அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் 1 பெண் மயிலும் என 6 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றினார். மேலும், மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில், இறந்து கிடந்த மயில்களின் உடல்களை கால்நடை மருத்துவர்கள் மூலம், உடற்கூறு ஆய்வு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தோட்டத்து உரிமையாளர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...