தமிழகத்தில் நாளை முதல்‌ முழு ஊரடங்கு.... கோவையில் நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ காய்கறிகள் விநியோகம்‌..!

கோவை: தமிழ்நாடு அரசு நாளை 24.05.2021 முதல்‌ 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்‌ பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள்‌, பழங்கள்‌ ஆகியவற்றை மாநகராட்சியில்‌ நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசு நாளை 24.05.2021 முதல்‌ 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்‌ பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள்‌, பழங்கள்‌ ஆகியவற்றை மாநகராட்சியில்‌ நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.

நாளை முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசு நாளை 24.05.2021 முதல்‌ 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்‌ பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள்‌, பழங்கள்‌ ஆகியவற்றை மாநகராட்சியில்‌ நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.

இதுதவிர தியாகிகுமரன்‌ மார்க்கெட்‌, ராமர் கோவில்‌ மார்க்கெட்‌, காந்திபுரம்‌ மார்க்கெட்‌, மேட்டுப்பாளையம்‌ ரோடு அண்ணா மார்க்கெட்டுகளில்‌ காய்கறி, பழங்கள்‌ விற்பனை செய்யும்‌ வியாபாரிகள்‌ தங்களது சொந்த வாகனங்களில்‌ விற்பனை செய்ய விருப்பப்பட்டால்‌, கோவை மாநகராட்சியில்‌ உள்ள 5 மண்டலங்களின்‌ உதவி ஆணையா்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்களில்‌ தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்‌.

உதவி ஆணையர்‌(பொ) ஞானவேல்‌ (கிழக்கு)-9442104113, சுந்தர்ராஜ்‌ (மேற்கு)-9442104146, மகேஸ்கனகராஜ்‌ (வடக்கு)-9894099024, சரவணன்‌ (தெற்கு)-9442501877, சிவசுப்பிரமணியம்‌ (மத்தியம்‌)-9489206055.

மேற்காணும்‌ பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்‌ எம்‌.௮ண்ணாதுரை (9443799212) நியமிக்கப்பட்டுள்ளார்‌.

மேலும்‌, விருப்பமுள்ள தன்னார்வலர்கள்‌ மாநகராட்சியில்‌ உரிய அனுமதி பெற்று தங்களது பணியினை மேற்கொள்ளலாம்‌. இதன்‌ ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்‌ ரத்தினம்‌ (9443799201) நியமிக்கப்பட்டுள்ளார்‌'' என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...