கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ., ஜெயராம் சார்பில் தினமும் இரண்டாயிரம் மக்களுக்கு கபசுர குடிநீர், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், முகக்கவசம் வழங்கப்பட்டது. நாளை முதல் சுண்டல், சுக்கு காபியும் வழங்கப்படுகிறது.

கொரோனா நோய் தோற்றுப் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், பொது மக்களுக்கு உதவும் நோக்கில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ., ஜெயராம் சார்பில் தினமும் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு 2,000க்கும் மேற்ப்பட்டோருக்கு கபசுர குடிநீர், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நாளை முதல் சுக்கு காபி சுண்டல் உள்ளிட்டவையும் சேர்த்து வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து எம்எல்ஏ., ஜெயராம் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு நோய்த் தொற்று பாதிப்பு முதல் அலை பரவலின் போது மக்களுக்கு, ‘அதிமுக' சார்பில் பல்வேறு உதவிகள் செய்தோம். தற்போது நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில், பல்வேறு நல உதவி பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன் அவர்களையும் சந்தித்து பேசினோம். எதிர்வரும் நாட்களிலும் மேலும் பல உதவிகளை மக்களுக்கு செய்ய உள்ளோம். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும்'' என்றார்.