கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரோனா தடுப்பு உதவி மையம்..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா தடுப்பு உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா தடுப்பு உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னேடுப்புகளை அரசு எடுத்துவருகிறது. கோவை மாவட்டத்தில் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள சூழலில், பொது மக்களுக்கு உதவும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, ‘‘இந்த உதவி மையத்தின் மூலம் அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள், நோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள் குறித்த விவரம், மருத்துவ ஆலோசனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான தொலைத் தொடர்பு வழி ஆலோசனை, வாகன உதவி, மற்றும் ரத்த தானம் செய்வது குறித்த விவரங்கள் ஆகிய உதவிகள் செய்திட ஏற்பாடுகள் உள்ளது.

பல்துறை சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்டு கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்து இந்த உதவி மையம் Left Help center for Covid-19 என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா தடுப்பு மையத்தின் முகவரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 138, 2வது வீதி விரிவாக்கம், காந்திபுரம், 100அடி ரோடு, கோவை-12. தொடர்புக்கு: 94438 84053, 94887 08832, 80564 44815, 99941 58832, 81898 02073'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...