கோவை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பு ஊசி போட தனி மையம் அமைக்க வேண்டும் என கோவை எஸ்.எஸ். குளம் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பு ஊசி போட தனி மையம் அமைக்க வேண்டும் என கோவை எஸ்.எஸ். குளம் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் பல இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பகுதியில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மையம் அமைக்கப்படவில்லை. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சரவணம்பட்டி அன்னூர், சூலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வசதியாக தனியாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சுகாதார மையம் மற்றும் அரசு பள்ளிகள், தனியார் திருமண, மண்டபங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் ஏற்கெனவே இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி போடுவதற்காக கோவில்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வருவதால் அங்கு கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. இன்று, முதல் டோஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர். ஆகவே, 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தனியாக மையம் அமைக்க வேண்டும்'' என்றனர்.