கோவை: கோவை ஆவின் நிறுவனம் கோவை மாவட்டத்தில் 349 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் இருந்து தரமான பாலை கொள்முதல் செய்கிறது. கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிறுவனத்திற்கு உலகத் தரச் சான்று ஐஎஸ்ஓ (22000 - 2018), வழங்கப்பட்டுள்ளது.

கோவை ஆவின் நிறுவனத்திற்கு உலகத் தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை ஆவின் நிறுவன பொது மேலாளர் ரவி குமார், ‘‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால்வளத் துறை ஆணையர் நந்தகோபால் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிறுவனத்திற்கு உலகத் தரச் சான்று ஐஎஸ்ஓ (22000 - 2018), வழங்கப்பட்டுள்ளது.
கோவை ஆவின் நிறுவனம் கோவை மாவட்டத்தில் 349 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் இருந்து தரமான பாலை கொள்முதல் செய்கிறது. அதை பச்சாபாளையம் பால்பண்ணை வளாகத்தில் பலப்படுத்தி பால் மற்றும் பால் உபபொருள் நெய், வெண்ணெய், பால் கோவா, நறுமணப் பொருள், பால், மோர் மற்றும் தயிர் நுகர்வோர்க்கு விற்பனை செய்து வருகிறது. மேலும், கோவை மாவட்ட பால் நுகர்வோருக்கு தரமான பாலை நியாயமான விலையில் அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வருங்காலத்திலும் தடையின்றி வழங்கி வரும். கோவை ஆவின் நிறுவனத்திற்கு உலகத் தரச் சான்று கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.