கோவை: கோவையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த வாலிபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன், வயது 24, கட்டடத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் நட்பு ஏற்பட்டது. மகேந்திரன் அந்த மாணவிக்கு செல்போனில் சினிமா பாடல்களை டவுன்லோட் செய்து தருவதாக கூறி அடிக்கடி பேசி உள்ளார். மேலும், அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும் வாட்ஸ் அப்பில் போட்டோ மற்றும் தகவல்களை பரிமாற்றம் செய்து வந்தனர்.
இந்தநிலையில், மகேந்திரன் அந்த மாணவியிடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதனை, அந்த மாணவி நம்பியுள்ளார். இதையடுத்து மகேந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீஸார் போக்சோ சட்டத்தில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.