வங்கக் கடலில் உருவாகிய புயலால் கோவையில் இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழை..!

கோவை: கோவையில் மேகமூட்டமாக காணப்பட்டதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாகப் பெய்து கொண்டே இருந்தது.


கோவை: கோவையில் மேகமூட்டமாக காணப்பட்டதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாகப் பெய்து கொண்டே இருந்தது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 26-ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்தநிலையில், இன்று முழுமையான புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால் - தமிழகத்தில் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, நேற்று மாலையில் இருந்து கோவையில் மேகமூட்டமாகக் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. பலத்த மழை இல்லாமல் சாரல் மற்றும் மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வெயிலுக்கு ஆளாகி வந்த கோவை மக்கள் இந்தக் குளிர்மழையால் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல், அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இது வடக்கு, வட மேற்காக நகர்ந்து 24-ம் தேதிக்குள் புயலாக உருவாகும். பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் அது அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. வருகிற 26-ஆம் தேதி மாலையில் மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா வங்கதேசம் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...