கோவை: தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம் என்ற நிலையில் கோவை கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதனால் கோவை டவுன்ஹால், பெரியகடைவீதி, காந்திபுரம், சிங்காநல்லூர், ஆர்.எஸ். புரம், சரவணம்பட்டி, சுந்தராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்டி கடைகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் திறக்கப்பட்டன.
மேலும் கடைகள் திறக்கும் அறிவிப்பை தெரிந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடை வீதிக்கு சென்று ஆர்வம் காட்டினர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. இன்று காய்கறி கடைகளில் வழக்கத்திற்கு மாறாக, அதிக எண்ணிக்கையில் கூட்டம் காணப்பட்டது. ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை பொதுமக்கள் பைகளில் வாங்கிச் சென்றனர். சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கினர். மளிகை கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
இன்று காலை முதலே அனைத்து மார்க்கெட்டுகளில் கூட்டம் நிறைந்து வழிகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் பைகளை கையில் தூக்கியபடி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அசைவ பிரியர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு அசைவம் சாப்பிட முடியாத காரணத்தினால் அசைவ கடைகளில் கறி வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.