திருப்பூரில் போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கவில்லை... தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூல்... பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

திருப்பூர்: திருப்பூரில் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், தனியார் பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சூழ்நிலையில் இன்று அண்டை மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருப்பூரில் இருந்து ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை.



சேலம் வரை செல்லும் பேருந்துகளில் ஈரோடு பயணிகளை ஏற்றாததன் காரணமாக அங்கு உள்ள தனியார் பேருந்துகள் ஈரோடு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல சாதாரண கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று இரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...