தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு... இன்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம்... திருப்பூரில் போக்குவரத்து நெரிசல்..!

திருப்பூர்: தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மளிகை, காய்கறி பொருட்கள் வாங்க இன்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மட்டன், சிக்கன், மீன் கடைகளிலும் மக்கள் திரண்டனர். இதனால் திருப்பூரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


திருப்பூர்: தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மளிகை, காய்கறி பொருட்கள் வாங்க இன்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மட்டன், சிக்கன், மீன் கடைகளிலும் மக்கள் திரண்டனர். இதனால் திருப்பூரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் மூடியிருந்த காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று மதியத்திற்கு மேல் உடனடியாக திறக்கப்பட்டன. ஒரு வாரம் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரு வாரத்திற்கு வாங்கி வைத்து கொள்ள முடிவு செய்தனர்.



இதனால், அவர்கள் மளிகை கடை, காய்கறி கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திரண்டனர். மொத்தமாக அவர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு மட்டன், சிக்கன், மீன் கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் குவிந்ததால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...