கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு, அதிகாலை முதலே பயணிகள் குவிந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால்,அரசின் 50 சதவிகித பயணிகளுடன் தான் பேருந்துகள் இயங்க வேண்டும் என்ற பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டது
கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு, அதிகாலை முதலே பயணிகள் குவிந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், அரசின் 50 சதவிகித பயணிகளுடன் தான் பேருந்துகள் இயங்க வேண்டும் என்ற பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டது.
தமிழகம் முழுவதும், நாளை திங்கள் கிழமை முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பின்பற்றபட அரசு உத்தரவிட்டுள்ளதால் சனிக்கிழமை மாலை முதல், ஞாயற்றுகிழமை இரவு 9 மணிவரை அனைத்துகடைகளும் திறப்பதற்கும், பொது போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கபட்டுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவையில் தங்கிவேலை பார்ப்பவர்கள், முழுஊரடங்கால் வேலையில்லாமலும், உணவிற்கு வழியில்லாமல் சிரமப்பட வேண்டி இருக்கும் என்று அஞ்சி, சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாததால் நேற்று முதல் பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தற்பொழுது அரசு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு இரவு 9 மணிவரை பேருந்துகள் இயங்கும் என்று அறிவித்ததை தொடர்ந்து, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பழனி, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, திண்டுக்கல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு செல்ல பயனிகள் குவிந்தனர்.
ஆனால், அரசு அறிவித்ததுபோல், தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்காததால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டது போல், கூடுதல் பேருந்துகள் வராததால் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து விரக்தியுடன் திரும்பிச்சென்றனர்.
இதனால் அரசு அறிவித்த 50 சதவிகித பயனிகளுடன் பேருந்து இயங்கலாம் என்ற பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கபடாததால், மேலும் நொய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.