கோவை: நேற்றும் இன்றும் ஊரடங்கு, தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை உக்கடம் ராமர் கோவில் வீதி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க காலை முதல் மக்கள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், நேற்றும் இன்றும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம் என்றும் நாளை முதல் ஒரு வாரத்துக்கு பால் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று முதல் அலைமோதி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் ராமர் கோவில் வீதி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க குவிந்து வருகின்றனர்.

அனைவரும் முக கவசன் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறி இருக்கும் நிலையில் முக கவசம் அணிந்திருந்தாலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் முட்டிமோதிகொண்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்து வருவது, மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட கூடும் என்று சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.