பொள்ளாச்சி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் நாளை இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில், பொள்ளாச்சியில் இன்று அறிவிப்பு வந்த உடனேயே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. கடைவீதிகளில் ஜவுளி கடைகள், மளிகை கடைகள், மின்சார உபகரணங்கள் மற்றும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

தங்களின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து சிறு மற்றும் பெரிய கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தன. கடைகள் திறக்கப்பட்டதால், தங்களுக்குத் தேவையானவற்றை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.