கோவை: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து மொத்த காய்கறி வியாபாரிகள், பல்பொருள் அங்காடிகள், உணவக உரிமையாளர்கள் ஆகியோருடன் மாநகராட்சி ஆணையாளர் கலந்துரையாடினார்.
கோவை: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து மொத்த காய்கறி வியாபாரிகள், பல்பொருள் அங்காடிகள், உணவக உரிமையாளர்கள் ஆகியோருடன் மாநகராட்சி ஆணையாளர் கலந்துரையாடினார்.
தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்வது குறித்து மொத்த காய்கறி வியாபாரிகள், பல்பொருள் அங்காடிகள், உணவக உரிமையாளர்கள் ஆகியோருடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., காணொலி வாயிலாக இன்று(22.05.2021) மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடி கீழ்க்கண்ட வழிமுறைகளைத் தெரிவித்தார்கள்.
1. பல்பொருள் அங்காடியில் மின்னனு வாத்தகம் (Online) மூலமும் மற்றும் தங்களுடைய சொந்த வாகனங்கள் மூலமும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்கே பொருட்களை விநியோகம் செய்யலாம்.
2. காய்கறிகள், பழ வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையின் பேரில் காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் செய்யலாம்.
3. மேற்காண் பல்பொருள் அங்காடிகள், வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்த கொள்முதல் செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்கும், தங்களுடைய லாரி மற்றும் டிரக் முதலான வாகனங்களுக்கு மாநகராட்சியிடம் இருந்து அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வியாபாரிகள் அந்தந்த மண்டலத்திற்குரிய கண்காணிப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு அவர்கள் தெரிவிக்கும் வழிமுறைகளின்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளின்படியும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய சேவையின்போது போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பாதுகாப்பாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.