பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கையாக, பொள்ளாச்சியில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு, முன்னாள் மாணவர்கள் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் சொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை அடுத்து தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சியில் 1986ஆம் ஆண்டு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் சுரேஷ் தங்கவேல் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து, இரண்டு லட்சம் ரூபாய் செலவில் மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் கருவிகள், மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் இந்தப் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.