திருப்பூர்: திருப்பூரில் திடீரென ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்ததில், தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்வராஜ் திடீரென மாஸ்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை ஆய்வு செய்தார்.

அப்போது தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரை ஏற்று உடனடியாக அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டார்.
மேலும், தரமற்ற அரிசி வழங்கினால் அதனை வாங்க மறுத்து தரமான அரிசி வழங்கக் கேட்குமாறும், இல்லை என்றால் தன்னை அழைத்துப் புகார் தெரிவிக்கலாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.