கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரத்தைத் தடுக்கும் நோக்கோடு, எல்.எம்.டபிள்யூ நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பாக எல்.எம்.டபிள்யூ, நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயதுக்கு மேல் 44 வயதுக்குட்பட்ட 5000 தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கணியூர் பகுதிகளில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ் குமார் ஆகியோர் முகாமைப் பார்வையிட்டனர். அப்போது, எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரிகள் உடனிருந்தனர்.