கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளி எஸ்டேட்டுகள் செல்லும் பாதைகளை சோதனை சாவடி அமைத்து பொதுமக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 165 பேருக்கு கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் இறந்து விட்டனர்.
இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இருந்து வால்பாறை பகுதியில் பொதுமக்கள் வரத்து அதிகரித்து இருந்த நிலையில், வால்பாறையை சுற்றியும் ஸ்டான் மோர் சந்திப்பு சாலை, புது தோட்டம் சாலை, நடுமலை சாலை, சிறுகுன்றா சாலை போன்ற நான்கு இடங்களில் வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் பாதைகளாகும்.

இந்த நிலையில், எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வருபவர்களும், வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் மக்களை தடை செய்ய வருவாய் துறை சார்பாக வால்பாறை காவல் துறையினர் சோதனை சாவடி அமைத்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.