கோவையில் கொரோனா தொற்றுக்கு 4 நாட்களில் 58 பேர் பலி..! இறந்தவர்களின் உடல் 12 மயானங்களில் நள்ளிரவிலும் தகனம்!

கோவை: கோவையில் கடந்த 4 நாட்களில் 58 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் 12 மயானங்களில் தகனம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கடந்த 4 நாட்களில் 58 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் 12 மயானங்களில் தகனம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது. கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்க துவங்கியது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாக இருந்தது. இதனால் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் கோவையில் கடந்த 16-ந் தேதி 15 பேரும், 17-ந் தேதி 14 பேரும், 18-ந் தேதி 19 பேரும், 20-ந் தேதி 20 பேர் என 4 நாட்களில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால் கோவையில் நள்ளிரவு நேரத்திலும் மின் மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் இறப்பை கருத்தில் கொண்டு தற்போது கோவையில் 12 மின் மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதல் அலையின் போது ஒரே ஒரு நாள் மட்டுமே 15 பேர் இறந்தனர். அதன்பின்னர் ஒற்றை இலக்கத்தில்தான் இறப்பு இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரட்டை இலக்கத்தில் இறப்பு எண்ணிக்கை உள்ளது. இதனால் இறந்தவர்களை தகனம் செய்ய கூடுதல் மின் மயானங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி சரவணம்பட்டியில் 2 மயானம், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், வீரகேரளம், துடியலூர், பீளமேடு, ஆத்துபாலம், சொக்கம்புதூர், போத்தனூர், சித்தாபுதூர் ஆகிய 12 மயானங்களில் தகனம் செய்ய எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறு மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்காக அங்குள்ள புதர்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...