கிணத்துக்கடவு தொகுதியின் மையப்பகுதியான மலுமிச்சம்பட்டியில் கொரோனா தடுப்பூசி மையம் அமைத்ததற்கு நன்றி - குறிச்சி பிரபாகரன்

கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியின் மையப்பகுதியான மலுமிச்சம்பட்டியில் கொரோனா தடுப்பூசி மையம் ஏற்படுத்தியுள்ளதற்கு குறிச்சி பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியின் மையப்பகுதியான மலுமிச்சம்பட்டியில் கொரோனா தடுப்பூசி மையம் ஏற்படுத்தியுள்ளதற்கு குறிச்சி பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிணத்துக்கடவு தொகுதியில் பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையப்பட்டியலில் கிணத்துக்கடவு தொகுதிக்கு தடுப்பூசி மையம் அறிவிக்கப்படாமல் இருந்தது.



இதனிடையே, கிணத்துக்கடவு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தொகுதியின் மையப்பகுதியான குறிச்சி, மதுக்கரை அல்லது அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் அமைத்து தரக்கோரியும், மதுக்கரை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் (central oxygen system) ஆக்சிசன் வசதி மற்றும் இதர கூடுதல் படுக்கை வசதிகள் செய்து தரக்கோரியும், அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவமனையில் தேவையான கூடுதல் வசதிகள் செய்து தரக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களிடமும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அவர்களிடமும் கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கோரிக்கை மனுவை அளித்தார்.

இந்நிலையில், கோவை கிணத்துக்கடவு தொகுதி மக்களின் நலன்கறுதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கையை ஏற்று கிணத்துக்கடவு தொகுதியின் மையப்பகுதியான மலுமிச்சம்பட்டியில் கொரோனா தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும் கிணத்துக்கடவு தொகுதி மக்களின் சார்பாக குறிச்சி பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...