கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்ற 54 மருத்துவ பணியாளர்களுக்கு 13 லட்சம் ரூபாய் சம்பள தொகையை திமுக நகர செயலாளர் மருத்துவர் வரதராஜன் வழங்கினார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 160 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கட்டமைப்பு வசதிகள் இருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் இல்லாததால் சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 54 பேர் கொரோனா காலத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர்களுக்கான முதல் மாத சம்பள தொகையினை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் மருத்துவர் வரதராஜன் ரூ 10 லட்சம் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து பெற்ற 3 லட்சம் என மொத்தம் 13 லட்சத்தை இன்று மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.
கொரோனா காலத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, பொள்ளாச்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தற்போது இந்தத் தொகையானது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா காலம் முடியும் வரை இந்த பணி தொடரும் என்று மருத்துவர் வரதராஜன் தெரிவித்தார்.