நீலகிரி: உலகப் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க இணையதள சேவையை வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கம்போல் மலர்க்கண்காட்சி நடைபெறும் என்ற நோக்கில் கடந்த ஆறு மாத காலமாக அரசு தாவரவியல் பூங்காவில் 52 வகையைச் சேர்ந்த 293 ரகங்களில், 25 ஆயிரம் மலர் தொட்டிகளில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
தற்போது இந்த மலர் நாற்றுகளில் லில்லியம்ஸ், டேலியா, சால்வியா, பெட்டூனியா, ஆஸ்டர், மேரி கோல்டு உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இந்நிலையில், பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவிட்-19 தடுப்பூசியை பொதுமக்கள் போட்டுக் கொள்ளும் வகையில் வாசகம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காரணமாக தயார் செய்யப்பட்ட கண்கவர் மலர்கள் மிகவும் எளிய முறையில் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

மலர் மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள பல வண்ண மலர்கள் குறித்த விழிப்புணர்வுகளையும் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேசன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்கள் கண்கவர் மலர்கள் கண்டுகளிக்கும் வகையில் இணையதள வழி (Virtual Mode) மற்றும் சமூக ஊடகம் மூலம் சேவையை வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஆக்சிஜன்கள் வந்தபிறகு ஒவ்வொரு மாவட்டமாக பிரித்து தரப்படும் என்று கூறினார்.