கோவையில் சி.ஆர்.ஐ. டிரஸ்ட் சார்பில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை விரைவில் துவக்கம்!

கோவை: கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பாக கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய புதிய சி.ஆர்.ஐ. டிரஸ்ட் மருத்துவமனையை வரும் வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.


கோவை: கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பாக கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய புதிய சி.ஆர்.ஐ. டிரஸ்ட் மருத்துவமனையை வரும் வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.

இதற்காக சுமார் 3 கோடி மதிப்பீட்டில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் C.R.I. Pumps நிறுவனத்தின் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தை கோவிட் சிகிச்சை மருத்துவமனையாக முற்றிலும் மாற்றி அமைத்து சேவை செய்ய உள்ளது. இங்கு தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தரமான முறையில் சிகிச்சை அளிக்க உள்ளது.

இந்த C.R.I. அறக்கட்டளை மருத்துவமனை, கொரோனா சிகிச்சையை எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட உள்ளது.



அரசின் கொரோனாவை கட்டுப்படுத்தும் அதி தீவிர நடவடிக்கைகளுக்கு, இந்த எங்களது பங்களிப்பு உறுதுணையாக அமையும் என நம்புகிறோம்.

இந்த திட்டம் குறித்த கடிதத்தை சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் அறங்காவலர்களான G. சௌந்தரராஜன், மற்றும் G. செல்வராஜ் ஆகியோர் தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.

சி.ஆர்.ஐ. நிறுவனம் சமூக நலனுக்காக பல ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பது, விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறந்த வேளாண்மைச் செம்மல் விருது வழங்குதல், மேலும் குறைந்த செலவில் தரமான மருத்துவத்தையும் வழங்கி வருகிறது."

இத்தகவல் சிஆர்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...