கோவை: கோவை முக்கியச் சாலைப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் மண்டையோடு ஒன்று சாலை ஓரத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த, போலீஸார் மண்டை ஓட்டைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் இன்று மதியம் பாதி எரிந்த நிலையில் ஒரு மண்டை ஓடு கிடந்ததைப் பார்த்த மக்கள் அச்சப்பட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து, சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீஸார் மண்டையோட்டைக் கைப்பற்றி, இந்த மண்டை ஓடு ஆணா? பெண்ணா? என்பது குறித்த ஆய்வுக்காக அனுப்பினர். பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த மண்டையோட்டை சுடுகாட்டிலிருந்து நாய்கள் எதுவும் தூக்கிக்கொண்டு வந்து விட்டனவா? இல்லை யாரும் கொலை செய்து எரித்து மண்டையோட்டை வீசி உள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
முக்கியச் சாலையில் நடுப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த மண்டையோட்டினால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.