கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் 1,750 மது பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மற்றும் தமிழகமெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில், மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸாருக்கு இடையர்பாளையம் பகுதியில் வீட்டுப் பகுதியில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. உடனடியாக மதுவிலக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வீட்டில் 1,750 குவார்ட்டர் மதுட்டில்கள் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இடையர்பாளையம் கே.கே.நகர் ஆறுமுகம் என்பவருடைய மகன் முருகேசன் 42, என்பவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்த 1,750 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இவ்வளவு மதுபாட்டில்கள் எங்கிருந்து பெற்றார். இவருக்கு மது சப்ளை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இவருடைய தொழில் காலி மது பாட்டில்களை சேகரித்து மதுபான தயாரிப்பு நிறுவனத்திற்கு மொத்தமாக வழங்குவது இவருடைய பணியாக உள்ளது.