கோவை: கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை வியாபாரிகள் முழுமையாக பின்பற்ற வேண்டும். வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கிணத்துக்கடவு பகுதி மளிகை மற்றும் காய்கறிகடை உரிமையாளர்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகளில் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை முறைப்படுத்த வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடைகளை மூட வேண்டும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால், மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளிடம் வட்டாட்சியர் வலியுறுத்தினார்.
இதேபோல், வியாபாரிகளும் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். வியாபாரிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு செல்லபடும் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.